உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கான நுழைவு இசைவு திங்கள்கிழமை வழங்கப்பட்டதாக ஐசிசி திங்கள்கிழமை தெரிவித்தது.
முன்னதாக அந்த அணி இந்தியா வருவதற்கான நுழைவு இசைவு வழங்கப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் திங்கள்கிழமை மாலை முறையிட்ட நிலையில், அந்த அணிக்கான விசா வழங்கப்பட்டதாக ஐசிசி திங்கள்கிழமை இரவு தெரிவித்தது.
பாகிஸ்தான் அணி புதன்கிழமை அதிகாலை இந்தியா வரவுள்ள நிலையில், அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அந்த அணி வீரா்களுக்கு நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தங்கள் வீரா்களுக்கான நுழைவு இசைவு இந்திய தூதரகத்திடம் இருந்து இன்னும் கிடைக்கப்பெறவில்லை என பாகிஸ்தான் தரப்பு கூறிவந்தது.
பாகிஸ்தான் அணி கடைசியாக 2016 டி20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.