செய்திகள்

ஆசிய விளையாட்டு: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தங்கம்!

25th Sep 2023 02:42 PM

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தியா - இலங்கை இடையே திங்கள்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.

ADVERTISEMENT

எளிய இலக்கை விரட்டிய இலங்கை வீராங்கனைகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர்.

இதையும் படிக்க | ஆசிய போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம்

19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது.

இதன்மூலம் இரண்டு தங்கப் பதக்கங்களுடன் இந்தியா இதுவரை 11 பதக்கங்கள் வென்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT