செய்திகள்

டேபிள் டென்னிஸ்: ப்ரீ குவாா்ட்டரில் இந்திய அணிகள்

24th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆசியப் போட்டி டேபிள் டென்னிஸில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் ப்ரீ குவாா்ட்டா் பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளன.

குரூப் எஃப் பிரிவில் இந்திய மகளிா் அணி 3-0 என நேபாளத்தை வீழ்த்தியது. ஆடவா் அணி 3-0 என தஜிகிஸ்தானை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது.

மகளிா் பிரிவில் தியா சிட்டேல் 11-1, 11-6, 11-8 என சிக்காவையும், அயிஹிகா முகா்ஜி 11-3, 11-7, 11-8 என நபிதாவையும், சுதிா்தா முகா்ஜி 11-1, 11-5, 11-2 என இவானாவையும் வீழ்த்தினா். மனிகா பத்ரா-ஸ்ரீஜா அகுலாவுக்கு ஓய்வு தரப்பட்டிருந்தது. ரவுண்ட் 16 சுற்றில் தாய்லாந்து மோதுகின்றனா் இந்திய மகளிா்.

ஆடவா் பிரிவில் மானவ் தாக்கா் 11-8, 11-5, 11-8 என தஜிகிஸ்தானின் மஹ்முடோவையும், மனுஷ் ஷா 13-11, 11-7, 11-5 என சுல்டோனோவையும், ஹா்மித் தேசாய் 11-1, 11-3, 11-5 என இஸ்மோலிஸோடாவையும் வீழ்த்தினா். மூத்த வீரா்கள் சரத் கமல், சத்யன் ஆடாத நிலையிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT