செய்திகள்

உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹசரங்கா விலகல்!

24th Sep 2023 12:29 PM

ADVERTISEMENT

 

பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 48 ஒருநாள் போட்டிகளில் 832 ரன்களும் 67 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இலங்கை அணிக்கு முக்கியமான ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். ஆசிய கோப்பை போட்டியிலும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார் ஹசரங்கா. 

இதற்கு முன்பாக லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவரும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவருமாக ஹசரங்கா அசத்தினார். 

இதையும் படிக்க: ஆர்டிஎக்ஸ்: ரூ.100 கோடி வசூல்; எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

ADVERTISEMENT

தசைப்பிடிப்பு காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் செப்.28ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி அணிக்கான கடைசி மாறுதல்களை அறிவிக்கலாம் என்பதால் இன்னும் 4 நாள்கள் இருக்கிறது. 

இதையும் படிக்க: ஓபனிங், மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

ஏற்கனவே மதீஷா தீக்‌ஷானா ஆசிய கோப்பை போட்டியின்போது காயமடைந்தார். இருப்பினும் அவர் விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஹசரங்காவின் இழப்பு இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்குமென கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க: உலகக் கோப்பை தொடர்: விசாவுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் வீரர்கள்!

அக்.5ஆம் தேதி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி முதல் போட்டி அக்.7ஆம் நாள் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT