செய்திகள்

2வது ஒருநாள்: ஸ்மித் கேப்டன்; ஆஸி. டாஸ் வென்று பௌலிங் தேர்வு! 

24th Sep 2023 01:21 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். 

பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். ஆஸி அணியிலும் பல மாற்றங்கள் செய்துள்ளார்கள். 

ஆஸ்திரேலிய  அணி: ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேத்திவ் ஷார்ட், லபுஷேன், ஜோஸ் இங்கிலிஸ், கிரீன், ஆடம் ஜாம்பா, அலெக்ஸ் கைரி, சீன் அப்பாட், ஹேசல்வுட், ஸ்பென்சர் ஜான்சன். 

ADVERTISEMENT

இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ், ஸ்ரேயாஷ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா. 

முதல் போட்டியில் இந்தியா வென்று 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT