செய்திகள்

உலகக் கோப்பை தொடர்: விசாவுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் வீரர்கள்!

23rd Sep 2023 06:29 PM

ADVERTISEMENT

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் அணியின் அதிகாரிகள் விசா அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடரின் முதன்மையான போட்டிகள் அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ள நிலையில், அணிகள் தங்களுக்குள் முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளால் இந்த இரு நாடுகளும் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். 

இதையும் படிக்க: பிளேயிங் லெவனில் இல்லையெனில் குறைவாக உணரக் கூடாது: முகமது ஷமி

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள் விசா அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
 
உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணி துபை வழியாக ஹைதராபாத்துக்கு வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி வருவதாக இருந்தது. இந்தியா வந்தடைந்த பிறகு பாகிஸ்தான் அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும், அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது. 

ADVERTISEMENT

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் உள்பட 33 பேர் விசா (நுழைவு இசைவு) அனுமதிக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விசா கிடைத்தவுடன் துபை வழியாக ஹைதராபாத்துக்கு வந்தடைவார்கள்.

இதையும் படிக்க: அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா!

பாகிஸ்தான் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்)  வைத்திருக்கும் நபர் ஒருவருக்கு விசா  வழங்க உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT