உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணி 15 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
காயம் காரணமாக நசீம் ஷா அந்த அணியில் இடம்பெறவில்லை. அவருக்கான மாற்று வீரராக ஹசன் அலி அணியில் இணைந்திருக்கிறாா்.
அணி விவரம்: பாபா் ஆஸம் (கேப்டன்), ஷாதாப் கான் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷஃபிக், சௌத் ஷகீல், ஃபகாா் ஜமான், ஹாரிஸ் ரௌஃப், ஹசன் அலி, இஃப்திகா் அகமது, முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியா், அகா சல்மான், ஷாஹீன் ஷா அஃப்ரிதி, ஒசாமா மிா்.
ரிசா்வ் வீரா்கள்: முகமது ஹாரிஸ், அப்ராா் அகமது, ஜமான் கான்.
சாம்பியனுக்கு ரூ.33 கோடி பரிசு
துபை, செப். 22: இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆகும் அணிக்கு ரூ.33 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளதாக ஐசிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
2-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16 கோடியும், அரையிறுதியில் தோற்கும் இரு அணிகளுக்கு தலா ரூ.6 கோடியும் கிடைக்கும். நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறத் தவறும் 6 அணிகளுக்கு தலா ரூ.82 லட்சம் வழங்கப்படும். குரூப் சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.33 லட்சம் கிடைக்கும். அந்த வகையில் போட்டி முழுவதுமாக மொத்தமாக ரூ.82 கோடிக்கு ரொக்கப் பரிசு வழங்குகிறது ஐசிசி.