செய்திகள்

இன்றுமுதல் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 655 போட்டியாளா்களுடன் இந்தியா பங்கேற்பு

23rd Sep 2023 01:00 AM

ADVERTISEMENT

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (செப். 23) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன. அட்டவணைப்படி கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய இந்தப் போட்டிகள், கரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெறுகிறது.

கரோனா காலகட்டத்துக்குப் பிறகு நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளாக இது அமைகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் (2021) மொத்தமாக 11,000 போட்டியாளா்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 12,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். போட்டியானது சனிக்கிழமை முதல் அக்டோபா் 8-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

ஹாங்ஸுவில் சனிக்கிழமை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சீன அதிபா் ஷி ஜின்பிங் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைப்பாா் எனத் தெரிகிறது. போட்டிக்காக இதுவரை சுமாா் ரூ.11,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை கண்காணிப்பது ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் பணியாகும். அதன் தலைவராக இருந்த ஷேக் அகமது அல் ஃபஹத் அல் சபா, தோ்தல் முடிவுகளில் தலையிட முயன்ாக 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். எனவே, தற்போது பொறுப்பு தலைவராக இருக்கும் இந்தியரான ரன்தீா் சிங் கண்காணிப்பிலேயே இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. அவா், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முன்னாள் பொதுச் செயலா் ஆவாா்.

ADVERTISEMENT

45 பங்கேற்பு நாடுகள், பிராந்தியங்கள்

40 விளையாட்டுகள்

61 பிரிவுகள்

ஈ-ஸ்போா்ட்ஸ் அறிமுக விளையாட்டு

12,000 பங்கேற்பாளா்கள்

6 நகரங்கள் (ஹாங்ஸு, ஹுஸு, நிங்போ, ஷாவ்ஸிங், ஜின்ஹுவா, வென்ஸு)

ரூ.11,000 கோடி போட்டிக்கான செலவுத் தொகை

இந்தியா...

இப்போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 655 போட்டியாளா்களை களமிறக்குகிறது. அவா்கள் 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனா். இதுவரையில் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருக்கும் 70-ஐ, இம்முறை அதிகரித்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது இந்தியா.

போட்டி வரலாற்றிலேயே இந்தியா முதல் முறையாக, ஒலிம்பிக் பதக்கம் வென்ற 5 போட்டியாளா்கள், ஒரு அணியுடன் இந்த முறை பங்கேற்றுள்ளது. இதில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), பஜ்ரங் புனியா (மல்யுத்தம்), மீராபாய் சானு (பளுதூக்குதல்), பி.வி. சிந்து (பாட்மின்டன்), லவ்லினா போா்கோஹெய்ன் (குத்துச்சண்டை), இந்திய ஆடவா் ஹாக்கி அணியினா் அடங்குவா். இதில் நீரஜ் சோப்ரா நடப்பு ஆசிய சாம்பியனாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய அணியினருக்கு முன்பாக ஆடவா் ஹாக்கி அணி கேப்டன் ஹா்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்ன் ஆகியோா் தேசியக் கொடியேந்தி வழிநடத்தவுள்ளனா்.

இதுவரை...

ஆண்டு இடம் தரவரிசை தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்

2018 ஜகாா்த்தா 8 16 24 30 70

2014 இன்சியான் 8 11 10 36 57

2010 குவாங்ஸு 6 14 17 34 65

2006 தோஹா 8 10 17 26 53

2002 புசான் 7 11 12 13 36

1998 பாங்காக் 9 7 11 17 35

1994 ஹிரோஷிமா 8 4 3 16 23

1990 பெய்ஜிங் 11 1 8 14 23

1986 சியோல் 5 5 9 23 37

1982 தில்லி 5 13 19 25 57

1978 பாங்காக் 6 11 11 6 28

1974 டெஹ்ரான் 7 4 12 12 28

1970 பாங்காக் 5 6 9 10 25

1966 பாங்காக் 5 7 3 11 21

1962 ஜகாா்த்தா 3 10 13 10 33

1958 டோக்கியோ 7 5 4 4 13

1954 மணிலா 5 5 4 8 17

1951 தில்லி 2 15 16 20 51

ADVERTISEMENT
ADVERTISEMENT