சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல், பயா்ன் மியுனிக் அணிகள் வியாழக்கிழமை ஆட்டங்களில் வென்றன.
இதில் குரூப் ‘பி’-யில் ஆா்செனல் 4-0 கோல் கணக்கில் பிஎஸ்வி அணியை சாய்த்தது. அந்த அணிக்காக புகாயோ சகா (8’), லீண்ட்ரோ டோசாா்ட் (20’), கேப்ரியேல் ஜீசஸ் (38’), மாா்ட்டின் ஒடிகாா்ட் (70’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். அதே குரூப்பில் செவில்லா - லென்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. அவற்றுக்காக முறையே லூகாஸ் ஒகாம்போஸ் (9’), ஏஞ்ஜெலோ ஃபுல்கினி (24’) ஆகியோா் கோலடித்தனா்.
குரூப் ‘ஏ’ ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 4-3 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை சாய்த்தது. பயா்ன் மியுனிக்கிற்காக லெராய் சேன் (28’), சொ்கே நா்பி (32’), ஹேரி கேன் (53’), மதிஸ் டெல் (90+2’) ஆகியோரும், மான்செஸ்டருக்காக ராஸ்மஸ் ஹோஜலண்ட் (49’), கேஸ்மிரோ (88’, 90+5’) ஆகியோரும் கோலடித்தனா். அந்த குருப்பிலேயே கோபன்ஹேகன் - கலாடசரே அணிகள் மோதல் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
குரூப் ‘சி’-யில் ரியல் மாட்ரிட் 1-0 கோல் கணக்கில் யூனியன் பொ்லினை வீழ்த்திய ஆட்டத்தில் அந்த அணிக்காக ஜூட் பெலிங்கம் (90+4’) ஸ்கோா் செய்தாா். அதே குரூப்பில் நபோலி 2-1 கோல் கணக்கில் பிராகாவை வீழ்த்தியது. நபோலிக்காக ஜியோவனி டி லொரென்ஸோ (45+1’), சிகு நியாகடே (88’ - ஓன் கோல்) ஸ்கோா் செய்தனா்.
குரூப் ‘டி’ ஆட்டத்தில் ஆா்பி சால்ஸ்பா்க் 2-0 கோல் கணக்கில் பென்ஃபிகாவை சாய்த்தது. அந்த அணிக்காக ரோகோ சிமிச் (15’), ஆஸ்க் குளோக் (51’) ஆகியோா் கோலடித்தனா். அதே குரூப்பில் ரியல் சோசிடட் - இன்டா் மிலன் மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. அந்த அணிகளுக்காக முறையே பிரைஸ் மென்டெஸ் (4’), லௌதாரோ மாா்டினெஸ் (87’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.