செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் ஆஸ்திரேலியா!

21st Sep 2023 09:29 PM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களம் காண்கிறது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 22) முதல் தொடங்குகிறது.  உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க: ஒருநாள் தொடருக்கு நான் தயாராக உள்ளேன்: ஸ்டீவ் ஸ்மித்

நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென்  மேக்ஸ்வெல் இடம்பெற மாட்டார்கள் என்பதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இடம்பெறமாட்டார்கள். அவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் காயத்திலிருந்து குணமடைந்து நலமாக உள்ளேன். 3 போட்டிகளிலும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை  உள்ளது  என்றார்.

இதையும் படிக்க: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து முடிவு!

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தொடங்கும் தொடர் என்பது ஒருபுறமிருக்க, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவதற்கான தொடராகவும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் பார்க்கப்படுகிறது.

ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் தற்போது பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT