செய்திகள்

ஒருநாள் தொடருக்கு நான் தயாராக உள்ளேன்: ஸ்டீவ் ஸ்மித்

21st Sep 2023 05:56 PM

ADVERTISEMENT

காயத்திலிருந்து குணமடைந்து மன உறுதி மற்றும் உடல் உறுதியுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 22) பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்து மன உறுதி மற்றும் உடல் உறுதியுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க: பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் விடியோ எடுக்க அனுமதி பெற வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் பாட் கம்மின்ஸை சந்தித்தேன். அவரும் காயத்திலிருந்து மீண்டு நன்றாக உள்ளார். நான் சுழற்பந்துகளுக்கு எதிராக வலைப்பயிற்சி மேற்கொண்டேன். நான் அதிக அளவில் ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டேன். உடல்நிலை சரியாக ஊசி போட்டுக் கொண்டேன். ஊசி போட்டுக் கொண்ட பிறகு மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன். நான் நன்றாக உணர்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக எனது முழு பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன் என்றார்.

காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாதிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT