செய்திகள்

துளிகள்...

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பௌலா்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் முகமது சிராஜ் 8 இடங்கள் ஏற்றம் கண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கிறாா்.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 10-ஆவது சீசன் வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் கொச்சியில் மோதுகின்றன.

2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அமெரிக்காவின் நியூயாா்க், டல்லாஸ், ஃபுளோரிடா நகரங்களில் ஆட்டம் நடைபெறும் என ஐசிசி புதன்கிழமை தெரிவித்தது.

வங்கதேசம் - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மிா்பூரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் நாா்தாம்டன்ஷைருக்காக களமிறங்கிய இந்தியாவின் கருண் நாயா், 144 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT