செய்திகள்

உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய இரு தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள்!

21st Sep 2023 04:08 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் இருவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5  முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான அணிகளின் விவரங்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அண்மையில் அறிவித்தன. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஆண்ட்ரிச் நார்ட்ஜே மற்றும் சிசண்டா மகாலா உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் பெஹ்லுக்வாயோ மற்றும் லிஸாத் வில்லியம்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: எப்படி இருந்தவன் நான்... நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது: எஸ்.ஜே.சூர்யா

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியதாவது: இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் ஆண்ட்ரிச் நார்ட்ஜே மற்றும் சிசண்டா மகாலா விலகுவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. அவர்கள் இருவரும் சிறந்த தரமான வீரர்கள். அவர்கள் இருப்பது அணிக்கு  மிகுந்த பலமாக இருக்கும். அவர்கள் காயத்திலிருந்து மீண்டு அணியில் மீண்டும் இணைய தேவையான ஆதரவை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு வழங்கும். அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று அணிக்குத் திரும்புவார்கள் என்றார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT