திருவனந்தபுரம்: ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியா நெதர்லாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை விளையாட இருந்த பயிற்சி ஆட்டம் இடைவிடாத மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைடவிப்பட்டது.
ஏற்கெனவே, இங்கிலாந்துடனான முதல் பயிற்சி ஆட்டமும் கடந்த வாரம் இதேபோல் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நடப்பு உலகக் கோப்பை போட்டியில் ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட பேட்டிங்கோ, பெளலிங்கோ செய்யாமல் நேரடியாக போட்டியில் களம் காணும் ஒரே அணியாகியிருக்கிறது இந்தியா.
உலகக் கோப்பை போட்டி, வரும் 5ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 8ஆம் தேதி சென்னையில் சந்திக்கிறது.