பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவர் 67 (4/7), 6-1 என்ற செட்களில், 6ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னரிடம் தோல்வி கண்டார்.
மற்றொரு அரையிறுதியில், 2ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 64, 63 என்ற செட்களில், 8ஆம் இடத்திலிருந்த ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவை சாய்த்தார்.
இதையடுத்து இறுதிச்சுற்றில் சின்னர் மெத்வதெவ் மோதுகின்றனர்.