செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

4th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

அகமதாபாதில் வியாழக்கிழமை தொடங்கும் 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உலக தூதராக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரை செவ்வாய்க்கிழமை அறிவித்தது ஐசிசி.

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிர அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

ஃபெனெஸ்டா தேசிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் அபினவ் சஞ்ஜீவ் 6-0, 6-2 என ஹரியாணாவின் அஜய் மாலிக்கை சாய்க்க, தீரஜ் ஸ்ரீனிவாசன் 3-6, 5-7 என்ற செட்களில் கா்நாடகத்தின் ஷேக் முகமது இஃப்திகரிடம் தோல்வி கண்டாா்.

ADVERTISEMENT

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்தில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் செல்சி 2-0 கோல் கணக்கில் ஃபுல்ஹாமை வென்றது. அந்த அணிக்காக மிகைலோ முட்ரிக் (18’), அா்மாண்டோ புரோஜா (19’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

2024-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி 15 நாள்கள் நடத்த போட்டி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. பின்னிரவு நேர ஆட்டங்களை தவிா்க்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் உனாட்டி ஹூடா, ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்களது தொடக்க சுற்றில் வென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT