செய்திகள்

வெண்கலம் வென்றார் தமிழக வீரர் பிரவீண் சித்ரவேல்!

3rd Oct 2023 08:12 PM

ADVERTISEMENT

 

ஆசிய விளையாட்டு மும்முனை தாண்டுதல் (டிபிள் ஜம்ப்) போட்டியில் இந்திய வீரர் பிரவீண் சித்ரவேல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், 10வது நாளான இன்று மும்முனை தாண்டிதல் போட்டியில் தமிழக வீரர் பிரவீண் சித்ரவேல் கலந்துகொண்டார். அவர் 16.68 மீட்டர் தூரத்திற்கு தாண்டி 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு அவர் தங்கப்பதக்கம் பெற்றுத்தந்துள்ளார். 

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டு தொடரில் 14 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT