ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் யசஷ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் ஆடவர் அணி களமிறங்கியுள்ளது.
தகுதி சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய நேபாள அணியுடன், நேரடியாக காலிறுதியில் களமிறங்கும் இந்திய அணி இன்று மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை இந்திய அணி குவித்தது.
தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜெய்ஸ்வாலின் சதம் அமைந்தது. வெறும் 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் குவித்தார்.
இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுகள்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி!
இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால்(21 வயது) படைத்தார்.
முன்னதாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்(23 வயது) இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.