இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்திய அணியின் கேப்டனாக 11 ஆண்டுகள் விளையாடிவுள்ள தோனி, அனைத்துவித ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். உலக அளவில் சிறந்த கேப்டனாக இன்றுவரை வலம் வந்துகொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி உள்ளார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நீண்ட நாள்களாக நீள தலை முடியுடன் வலம்வந்த தோனி, தற்போது புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்காக ஆரம்பக் கட்டத்தில் விளையாடியபோது வைத்திருந்ததை போன்று நீள தலைமுடியுடன் கருப்பு டி-சர்ட் அணிந்திருக்கும் புகைப்படங்கள் பழைய தோனியை கண்முன் நிறுத்துகின்றன.
இதையும் படிக்க | சூர்யகுமார் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!
இந்த தோற்றத்தில், தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாள்களுக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “கதை நன்றாக இருந்தால் தோனி கதாநாயகனாக நடிப்பார்” என்று அவரது மனைவி சாக்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.