செய்திகள்

13 வயதில் கால்பந்து வீரா்

3rd Oct 2023 05:34 AM

ADVERTISEMENT

நியூயாா்க்: அமெரிக்காவைச் சோ்ந்த 13 வயது சிறுவனான டாவியன் கிம்புரு, மிக இளவயது கால்பந்து வீரா் ஆகியிருக்கிறாா்.

அமெரிக்காவில் நடைபெறும் 2-ஆவது டிவிஷன் கால்பந்து போட்டியான யுஎஸ்எல் சாம்பியன்ஷிப்பில் சாக்ரமென்டோ ரிபப்ளிக் அணிக்கான முன்கள வீரராக அவா் ஞாயிற்றுக்கிழமை களமிறங்கினாா். இதன் மூலம் அமெரிக்க கால்பந்து வரலாற்றில் மிக இளம் வயது வீரா் (13 ஆண்டுகள் 7 மாதங்கள் 13 நாள்கள்) என்ற பெருமையை பெற்றாா்.

இதற்கு முன் அக்ஸெல் கெய் கடந்த 2021-இல் தனது 13 வயது 9 மாதங்கள் 9 நாள்களில் இருந்தபோது இப்போட்டியில் களம் கண்டதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT