செய்திகள்

2011 உலகக் கோப்பையில் விளையாடி 2023 உலகக் கோப்பையிலும் விளையாடவுள்ள 10 வீரர்கள்!

3rd Oct 2023 04:35 PM

ADVERTISEMENT

 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் இந்திய மன்ணில் தொடங்குகின்றன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 10 அணிகள் மோதுகின்றன. 48 போட்டிகள் கொண்ட இந்த உலகக் கோப்பை தொடரில் 2011 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இருந்த 10 வீரர்கள் இதிலும் பங்கேற்க உள்ளார்கள். அவர்களது பட்டியல் பின்வருமாறு :  

ஸ்டீவ் ஸ்மித்: 2011 உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய ஸ்மித் 6 போட்டிகளில் 53 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் தற்போது உலைன் தலைசிறந்த வீரராக முன்னேறியுள்ளார். 

ஸ்டீவ் ஸ்மித்

விராட் கோலி: முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2011இல் தோனி தலைமையில் உலகக் கோப்பை விளையாடினார். இந்திய அணி கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.  2011இல் விராட் கோலி 282 ரன்களை எடுத்திருந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: விண்டேஜ் லுக்கில் தோனி: வைரலாகும் புதிய புகைப்படங்கள்

அஸ்வின்: அக்ஷர் படேல் காயம் காரணமாக விலக ரவிசந்திரன் அஸ்வினுக்கு இந்த உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் 2011இல் 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும் 4.61 எகானமியுடன் பந்து வீசிநார். தற்போது அஸ்வின் சிறந்த ஆல்ரவுண்டராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

விராட் கோலி, அஸ்வின்

ஷகிப் அல் ஹாசன்: வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன்  2011 உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 142 ரன்கள் எடுத்தும் 8 விக்கெட்டுகளும் எடுத்திருந்தார். ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

முஷ்ஃபிகுர் ரஹிம்: விக்கெட் கீப்பரான முஷ்ஃபிகுர் ரஹிம் 2011 உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 81 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் தற்போது முக்கியமான வீரராக வங்கதேச அணிக்கு மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க:  சூர்யகுமார் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

மஹமதுல்லா: முன்னாள் வங்கதேச அணி கேப்டன் மஹமதுல்லா 2011 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் 32 ரன்கள், 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

மஹமதுல்லா, ஷகிப் அல் ஹாசன், முஷ்ஃபிகுர் ரஹிம்.

கேன் வில்லியம்சன்: நியூசிலாந்தின் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடுவாரா மாட்டாரா என சந்தேகமாக இருந்தது. இறுதியில் அணியில் சேர்க்கப்பட்டார். 2011 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் 99 ரன்கள் எடுத்தார். 2019 உலகக் கோப்பையில் அணியை இறுதிப் போட்டிக்கு வழி நடத்தி சென்றார். 

இதையும் படிக்க: 10வது பயிற்சி ஆட்டம்: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு! 

டிம் சௌதி: இவரும் வில்லியம்சன் மாதிரி கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார். 2011 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.   

கேன் வில்லியம்சன், டிம் சௌதி.

ஆடில் ரஷித்:  இங்கிலாந்தின் லெக் -ஸ்பின்னர் ஆடில் ரஷித் 2011 உலகக் கோப்பை அணியில் இருந்தும் ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால் 2019  உலகக் கோப்பை அணியில் முக்கிய பங்காற்றினார்.

வெஸ்லி பார்ஸி: 2011 உலகக் கோப்பையில் 153 ரன்கள் எடுத்தார். தற்போது நெதர்லாந்து அணியில் முக்கியமான வீரராக இருக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT