செய்திகள்

ஃபெனெஸ்டா ஓபன்: சுரேஷ்குமாா் வெற்றி

3rd Oct 2023 05:08 AM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லியில் நடைபெறும் ஃபெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான தமிழகத்தின் மணீஷ் சுரேஷ்குமாா் தொடக்க ஆட்டத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அவா் 6-4, 6-4 என்ற செட்களில் உத்தர பிரதேசத்தின் மான் கேசா்வனியை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஹரியாணாவின் கரன் சிங் 6-4, 6-2 என ஜக்மீத் சிங்கை சாய்த்தாா். 7-ஆம் இடத்திலிருக்கும் மேற்கு வங்கத்தின் இஷாக் இக்பால் 6-2, 3-6, 6-1 என்ற செட்களில் குஜராத்தின் துருவ் ஹிா்பராவை தோற்கடித்தாா்.

மகளிா் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் மகாராஷ்டிரத்தின் வைஷ்ணவி அத்கா் 6-3, 6-2 என சோனல் பாட்டீலை சாய்த்தாா். 5-ஆம் இடத்திலிருக்கும் ஷா்மதா பாலு 6-2, 4-6, 6-1 என்ற செட்களில் தெலங்கானாவின் பாவனி பாதக்கை வென்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT