செய்திகள்

பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்துக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

2nd Oct 2023 08:24 PM

ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம்  9 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஓரிரு நாள்களே உள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. 

குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. மழையின் காரணத்தால் ஆட்டம் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 9  விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்துள்ளது. 

இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்!

ADVERTISEMENT

அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹாசன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தன்சித் ஹாசன் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 37  ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்ளே 3 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லே மற்றும் அடில் ரஷித் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சாம் கரண் மற்றும் மார்க் வுட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதையும் படிக்க: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT