செய்திகள்

பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை!

2nd Oct 2023 10:06 AM

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார். 

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் செப்டம்பர் 23 தொடங்கி நடைபெற்று வருகின்றன. வருகிற அக்டோபர் 8 ஆம் தேதி வரை சீனாவின் 6  நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில்45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 61 பிரிவுகளில் நடைபெறும் 40 விளையாட்டுப் போட்டிகளில் 12 ஆயிரம் பங்கேற்கின்றனர்.

இதில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் இலக்கை அடைந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்!

ADVERTISEMENT

இதன் மூலமாக கேரளத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார். 

1984 ஒலிம்பிக் தொடரில் 55.42 வினாடிகளில் பி.டி. உஷா இலக்கை அடைந்தது சாதனையாக இருந்தது.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி. உஷாவின் சாதனையை முறியடிப்பதாக வித்யா ராம்ராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது. 

இதையும் படிக்க | பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப் பதிவு

ADVERTISEMENT
ADVERTISEMENT