செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்!

2nd Oct 2023 10:20 AM

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்கேட்டிங்கில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் செப்டம்பர் 23 தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா ஸ்கேட்டிங்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை!

ஸ்பீடு ஸ்கேட்டிங் 3,000 மீ தொடர் ஓட்ட பந்தயத்தில் ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல் சாது, கார்த்திகா ஜெகதீஸ்வரன், சஞ்சனா பதுலா ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெண்கலம் வென்றது. சீனா தங்கத்தையும், தென் கொரியா வெள்ளியையும் வென்றது. 

அதே ஸ்பீடு ஸ்கேட்டிங் 3,000 மீ தொடர் ஓட்டத்தில்  ஆர்யன்பால், ஆனந்த் குமார், சித்தாந்த், விக்ரம் ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணியும் வெண்கலம் வென்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT