ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு மேலுமொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் அபேய் சிங் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார்.
சீனாவின் ஹாங்ஷெள நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
படிக்க | கோல்ஃப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!
இதில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் அபேய் சிங் பிலிப்பைன்ஸ் வீரரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 11-7, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் அபேய் தங்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியாவுக்கான தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.