செய்திகள்

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்!

1st Oct 2023 06:43 PM

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டு தடகளப் போட்டியில் வெள்ளி, வெண்கலம் என அடுத்தடுத்து பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆண்களுக்கான 1,500 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் அஜய்குமார் மற்றும் ஜின்சன் ஜான்சன் பதக்கங்களை வென்றனர்.

இதையும் படிக்க: காப்பீடு இல்லாமல் சென்னையில் வலம் வரும் மாநகரப் பேருந்துகள்!

அஜய்குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கமும் , ஜின்சன் ஜான்சன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப்  பதக்கம் வென்றார். 

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT