செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய மிட்செல் ஸ்டார்க்!

1st Oct 2023 03:57 PM

ADVERTISEMENT

நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு மழையின் காரணத்தால் முடிவு கிடைக்கவில்லை. முன்னதாக, மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம்!

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது நெதர்லாந்து. அந்த அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் மேக்ஸ்  ஓடௌத் விக்கெட்டினையும், கடைசி பந்தில் வெஸ்லி பரேசி விக்கெட்டினையும் வீழ்த்தினார். அதன்பின் அவர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் பாஸ்-டி-லீட் விக்கெட்டினை எடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ADVERTISEMENT

நெதர்லாந்து அணி நாளை மறுநாள் (அக்டோபர் 3) இந்தியாவையும், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானையும் பயிற்சி ஆட்டங்களில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT