ஆசிய விளையாட்டு ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.
ஆடவர் குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். குண்டு எறிதலில் 20.36 மீட்டர் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார் தஜிந்தர்பால் சிங். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தஜிந்தர் பால் சிங் தங்கம் வென்றிருந்தார்.
இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா!
இந்நிலையில், அவர் மீண்டும் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 13-வது தங்கமாகும்.
பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.