செய்திகள்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம்!

1st Oct 2023 11:37 AM

ADVERTISEMENT


ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலுமொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

சீனாவின் ஹாங்ஷெள நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் சோரவர் சிங், கெனன் செனாய், பிரித்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தக்கம் வென்றது. இவர்கள் 361 புள்ளிகளைப் பெற்றனர். 

குவைத் அணி வெள்ளிப்பதக்கத்தையும் சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. 

ADVERTISEMENT

10 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT