ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி இன்று (அக்.1) வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். இந்திய ஆடவர் அணி இன்று காலை தங்கப்பதக்கம் வென்ற நிலையில், மகளிர் அணி வெள்ளி வென்றுள்ளனர்.
சீனாவின் ஹாங்ஷெள நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் மணிஷா கீர், பிரீத்தி ரஜாக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி சீனாவை எதிர்கொண்டது.
இதன்மூலம், 11 தங்கம், 17 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.