செய்திகள்

அதிக பார்வையாளர்களை மைதானம் நோக்கி இழுத்த நடப்பு உலகக் கோப்பைத் தொடர்!

21st Nov 2023 03:25 PM

ADVERTISEMENT

 

நடப்பு உலகக் கோப்பைத் தொடர் உலகக் கோப்பை வரலாற்றில் மிக அதிகமான பார்வையாளர்களை மைதானத்துக்கு வரவழைத்துள்ளது.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் நேற்று முன் தினம் (நவம்பர் 19) நிறைவு பெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படிக்க: நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் வங்கதேச கிரிக்கெட் வீரர்!

ADVERTISEMENT

இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பைத் தொடர் அதிக அளவிலான பார்வையாளர்களை மைதானங்களுக்கு வரவழைத்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரை 12,50,307 பேர் மைதானத்துக்கு வந்து கண்டு களித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடப்பு உலகக் கோப்பைத் தொடர் கடந்த 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் நடத்தப்பட்ட உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும் அதிகமான பார்வையாளர்களை மைதானத்துக்கு வர வைத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரை 10,16,420  பேரும், 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட தொடரை 7,52,000 பேரும் மைதானத்துக்கு நேரில் வந்து பார்த்துள்ளனர். 

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மோடி ஆறுதல்!(விடியோ)

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்த போட்டிகளுக்குமான சராசரி பார்வையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 26,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT