செய்திகள்

குஜராத்தில் உலகக் கோப்பை இறுதி ஆட்டம்: பிரதமா் மோடி, ஆஸி. துணை பிரதமா் பங்கேற்பு

18th Nov 2023 12:14 AM

ADVERTISEMENT

குஜராத்தின் அகமதாபாதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை (நவ.19) நடைபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை, பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமா் ரிச்சா்ட் மாா்ல்ஸ் ஆகியோா் நேரில் காண உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயா்நிலை ஆய்வுக் கூட்டம் மாநில முதல்வா் பூபேந்திர படேல் தலைமையில் காந்திநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறுதி ஆட்டம் நடைபெறும் நரேந்திர மோடி மைதானம் மற்றும் கிரிக்கெட் வீரா்கள், ஆட்டத்தைக் காண வரும் முக்கிய தலைவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்க 4,500 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மைதானத்துக்கு வரும் கிரிக்கெட் ரசிகா்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் சாலைப் போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு முதல்வா் பூபேந்திர படேல் உத்தரவிட்டதாக மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT