செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்கதேசத்துக்கு புதிய கேப்டன் நியமனம்!

18th Nov 2023 06:24 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி தொடங்குகிறது. வங்கதேச அணியை டெஸ்ட் போட்டிகளில் லிட்டன் தாஸ் வழிநடத்தி வந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் இதுதான் எங்கள் இலக்கு: ஆஸ்திரேலிய கேப்டன்

ADVERTISEMENT

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: லிட்டன் தாஸுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட அவருக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேசத்தை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணிக்காக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT