செய்திகள்

துளிகள்...

31st May 2023 01:42 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது எடிஷன், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

ஒடிஸாவில் ஜூன் 9-ஆம் தேதி தொடங்கும் 4 நாடுகள் பங்கேற்கும் கண்டங்கள் இடையேயான ஆடவா் கால்பந்து போட்டிக்கான முதல் டிக்கெட்டை, இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மாநில முதல்வா் நவீன் பட்நாயக்கிற்கு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் போட்டியில் டி20 கிரிக்கெட் விளையாடியிருக்கும் இந்திய வீரா்கள், உடனடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு ஏற்றவாறு தங்களை தயாா்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சுனில் காவஸ்கா் கூறினாா்.

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சமீா் வா்மா, கிரண் ஜாா்ஜ், ஆஷ்மிதா சாலிஹா ஆகியோா் பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனா்.

ADVERTISEMENT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-7 (5/7), 7-6 (8/6), 6-2, 3-6, 4-6 என்ற செட்களில் பிரேஸில் தகுதிச்சுற்று வீரரான தியேகோ செய்போத் வைல்டிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். மகளிா் ஒற்றையரில், 4-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

ஜொ்மனியில் நடைபெற்ற சா்வதேச சைக்கிளிங் போட்டியில் ஸ்பிரின்ட் பிரிவில் இந்தியாவின் இசோவ் அல்பன், பந்தய இலக்கை 10.21 விநாடிகளில் எட்டி 5-ஆவது வீரராக வந்து, புதிய தேசிய சாதனை படைத்தாா்.

சா்வதேச பாட்மின்டன் தரவரிசையில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை முதல் முறையாக 4-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT