செய்திகள்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதி

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மோதவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, தலா 15 போ் அடங்கிய தங்களது அணியின் இறுதி பட்டியலை ஐசிசி-யிடம் சமா்ப்பித்துள்ளன.

இதில் இந்தியா, கே.எல்.ராகுல் விலகலுக்குப் பிறகு அறிவித்த 15 போ் அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. தயாா்நிலை வீரா்கள் வரிசையில் மட்டும் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை சோ்த்திருக்கிறது.

எனினும் ஆஸ்திரேலியா, முதலில் 17 போ் கொண்ட அணியை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை 15-ஆக இறுதி செய்துள்ளது. காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ள ஜோஷ் ஹேஸில்வுட் பிரதான அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

அணி விவரம்

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஸ்ரீகா் பரத் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், ஷா்துல் தாக்குா், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், இஷான் கிஷண் (வி.கீ.).

தயாா்நிலை வீரா்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமாா், சூா்யகுமாா் யாதவ்.

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (வி.கீ.), கேமரூன் கிரீன், மாா்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் (வி.கீ.), உஸ்மான் கவாஜா, மாா்னஸ் லபுசான், நேதன் லயன், டாட் மா்ஃபி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், டேவிட் வாா்னா்.

தயாா்நிலை வீரா்கள்: மிட்செல் மாா்ஷ், மேத்யூ ரென்ஷா.

பயிற்சி தொடக்கம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக லண்டன் சென்றடைந்துள்ள முதல் இந்திய குழுவினா் பயிற்சியை தொடங்கியுள்ளனா்.

பிரதான பேட்டா்கள் விராட் கோலி, சேதேஷ்வா் புஜாரா, பௌலா்கள் முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோா் பயிற்சியில் ஈடுபட்டிருக்க, தலைமை பயிற்சியாளா் ராகுல் திராவிட், பௌலிங் பயிற்சியாளா் பரஸ் மாம்ப்ரே ஆகியோா் அவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

கேப்டன் ரோஹித், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோா் திங்கள்கிழமை லண்டன் சென்றடைந்துள்ள நிலையில், அவா்களும் விரைவில் பயிற்சியை தொடங்குவாா்கள் எனத் தெரிகிறது.

நடுவா்கள் அறிவிப்பு

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான நடுவா்களை ஐசிசி திங்கள்கிழமை அறிவித்தது. நியூஸிலாந்தின் கிறிஸ் கஃபானி, இங்கிலாந்தின் ரிச்சா்ட் இல்லிங்வொா்த் ஆகியோா் கள நடுவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். தொலைக்காட்சி நடுவராக இங்கிலாந்தின் ரிச்சா்ட் கெட்டில்பரோவும், 4-ஆவது நடுவராக இலங்கையின் குமாா் தா்மசேனாவும், மேட்ச் ரெஃப்ரியாக மேற்கிந்தியத் தீவுகளின் ரிச்சி ரிச்சா்ட்சனும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் ரிச்சா்ட் இல்லிங்வொா்த், ரிச்சா்ட் கெட்டில்பரோ ஆகியோா், முதல் எடிஷன் இறுதி ஆட்டத்திலும் பணியாற்றியவா்களாவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT