செய்திகள்

சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் சிஎஸ்கே கோப்பைக்கு சிறப்பு பூஜை!

30th May 2023 08:20 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

ஆட்டநாயகன் விருது கான்வேவிற்கு கிடைத்தது. அவர் 25 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். இறுதி ஓவரில் 2 பந்துகளில் 10 ரன்கள் தேவையான போது ஜடேஜா அற்புதமாக அடித்து வெற்றிக்கு வித்திட்டார். தோனி கண்கள் கலங்கி ஜடேஜாவை தூக்கி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: முதன்முதலாக இலங்கை ஒருநாள் அணியில் பதிரானா!

ADVERTISEMENT

மதியம் சிஎஸ்கே வீரர்கள் சென்னை கிளம்பி வந்தனர். மாலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து சிஎஸ்கே நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர்.

சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “விரைவில் வெற்றி கொண்டாட்டம் குறித்த செய்தியை பகிர்வோம்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT