செய்திகள்

ரிஷப் பந்த்திற்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை! 

30th May 2023 06:50 PM

ADVERTISEMENT

 

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர்களில் ரிஷப்பும் ஒருவர். அவர் ஐபிஎல் போட்டிகளில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக 2021 மற்றும் 2022 ஆம் ஆகிய ஆண்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார்.

ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா்.  

இதையும் படிக்க:  ஐபிஎல் 2023: விருது வென்றவர்கள் பட்டியல்! 

ADVERTISEMENT

தற்போது வீட்டில் இருக்கும் ரிஷப்பிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று வருகிறது. கார் விபத்தில் சிக்கிய காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

இதையும் படிக்க: தோனி கை வைத்தால் மண்ணும் தங்கமாகும்: ஆகாஷ் சோப்ரா நெகிழ்ச்சி! 

சமீபத்தில் அவர் கையில் எந்த துணையுமின்றி நடந்துவரும் விடியோ வைரலானது. தற்போது அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லையென பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.  

நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் ரிஷப் பந்த் விரைவாக குணமாகி வருகிறார். தினமும் அவரை கண்காணித்து வருகிறோம். இது அவருக்கு உந்துதலாக இருக்கும். விரைவிலேயே அவர் திரும்ப வந்துவிடுவார் என நம்புகிறோம். இன்னொரு அறுவை சிகிச்சை அவருக்கு மன அழுத்ததை தரக்கூடும். இரண்டாவது அறுவை சிகிச்சை அவருக்கு தேவைப்படவில்லை.

ஊன்றுகோல் துணையின்றி அவரால் குறிபிட்ட தூரம் நடக்க முடிகிறது. உத்வேகமாக இருக்கிறார். தற்போது அவரது உடலை வலுப்படுத்தும் முனைப்பில் இருக்கிறோம். விரைவில் பயிற்சிக்கு தயாராவார் என நம்புகிறோம். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT