செய்திகள்

அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன்: தோனி

30th May 2023 10:33 AM

ADVERTISEMENT

ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்த்தது. பின்னா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, சென்னைக்கான இலக்கு 15 ஓவா்களில் 171 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. அதில் சென்னை 15 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.

இதையும் படிக்க | சென்னை 5-ஆவது முறையாக சாம்பியன்

இந்த வெற்றிக்கு பிறகு தோனி பேசுகையில்,

ADVERTISEMENT

“எனது ஓய்வை அறிவிக்க சரியான தருணமாக இது உள்ளது. இந்த போட்டியோடு விடைபெறுவது எளிதாக இருந்திருக்கும். அடுத்த 9 மாதங்கள் பயிற்சி செய்து இன்னொரு சீசன் விளையாடுவது கடினமானதாக இருக்கும்.

ஆனால், இந்தாண்டு நான் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் என்மீது காட்டிய அன்புக்கு நான் இன்னொரு சீசன் விளையாடுவது பரிசாக இருக்கும். எனது உடல் தகுதியை பொறுத்து முடிவெடுப்பேன்.

ரஹானே போன்று அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருப்பதால், இளம் வீரர்கள் அவர்களிடம் மனம்விட்டு பேச முடிகிறது. ராயுடுவின் சிறப்பு என்னவென்றால் களத்திற்கு வந்தால் 100 சதவிகிதம் கொடுக்க விரும்புவார். இந்திய அணிக்காக விளையாடும்போது இருந்து அவரை தெரியும். வேகப்பந்து மற்றும் சுழல் பந்துவீச்சை நன்றாக விளையாட கூடியவர். ஒய்வுக்கு பிறகு வாழ்வின் அடுத்த கட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT