செய்திகள்

சிஎஸ்கே வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய ரசிகர்கள்: விடியோ

30th May 2023 12:31 PM

ADVERTISEMENT

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற வெற்றியை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடிய விடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்த்தது. பின்னா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, சென்னைக்கான இலக்கு 15 ஓவா்களில் 171 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. அதில் சென்னை 15 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.

இந்த போட்டியை மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்த்த நிலையில், நாடு முழுவதும் வீடுகளில் குடும்பங்களுடன், நண்பர்களுடன், பல்வேறு ஹோட்டல்களில் பொதுத் திரை என கோடிக்கணக்கானோர் நேற்று இரவு முழுவதும் போட்டியை கண்டு ஆரவாரம் செய்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில்,  வேலூரிலுள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் நண்பர்களுடன்  ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்த்த ரசிகர்களில் ஒருவர் , சிஎஸ்கே  வெற்றியை தொடர்ந்து விடுதியின் அறைக் கதவுகளை அடித்து, கத்தி கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதேபோல், சென்னை ரசிகர் ஒருவர், ‘ஆத்தா ஓம் சக்தி தாயே, இந்த ஒரு பந்து அடிச்சு ஜெயிக்கனும்னு’ கடவுளிடம் கதறியதும், வெற்றி பெற்றவுடன் குதித்து கத்தி ஆரவாரம் செய்த விடியோ வேகமாக பரவி வருகின்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT