செய்திகள்

5வது முறையாக சாம்பியனான சென்னை அணி: கடைசி பந்தில் த்ரில் வெற்றி

DIN

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் பேட் செய்தது.

குஜராத்தின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆரம்பித்தனர். சிஎஸ்கே வீரர்கள் பல கேட்ச்களை பிடிக்க தவறி விட்டனர். கில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். ஆனால் அவர் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் சாஹாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். சாஹா 54 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி பதிரனா ஓவரில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பாண்டியாவும் அதிரடியாக 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 214/4  ரன்கள் எடுத்தது. 

சிஎஸ்கே சார்பாக பதிரனா 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார், ஜடேஜா, தலா 1 விக்கெட்டினையும்  எடுத்தனர். 

இதனையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. சிஎஸ்கே மூன்று பந்துகள் பிடித்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது தடைப்பட்டது. அதன்பின், மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 16 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஷிவம் துபே கான்வேவுடன் ஜோடி சேர்ந்தார். கான்வே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அதிரடியாக ஆடிய அவர் 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரையடுத்து களமிறங்கிய அஜிங்கிய ரஹானே அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 27 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அம்பத்தி ராயுடு 8 பந்துகளில் 19 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி வந்த வேகத்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

ரஷித் கான் பந்து வீச்சில் துபே தொடர்ச்சியாக அடித்த 2 சிக்ஸர்களும், அம்பத்தி ராயுடுவின் அதிரடி ஆட்டமும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட கடைசி ஓவரை மொஹித் சர்மா வீசினார்.  அவர் வீசிய முதல் 4  பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதனால் சிஎஸ்கேவுக்கு நெருக்கடி உருவாகியது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசி சிஎஸ்கேவுக்கு த்ரில் வெற்றியை பெற்றுத் தந்தார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகள் வென்ற அணி என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT