செய்திகள்

சாம்பியன் சிஎஸ்கே: வைரல் புகைப்படங்கள்!

30th May 2023 11:36 AM

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்த்தது. பின்னா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, சென்னைக்கான இலக்கு 15 ஓவா்களில் 171 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. அதில் சென்னை 15 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.

இந்தாண்டுடன் அம்பாதி ராயுடு ஓய்வு பெறுவதால், அவர் கைகளால் கோப்பையை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (படம்: ஜெய் ஷா / டிவிட்டர்)
5-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்
இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்ட தோனி - ஹர்திக் பாண்டியா
ஜடேஜா மற்றும் அவரது மனைவியுடன் தோனி(படம்: டிவிட்டர்/ஜடேஜா)
வெற்றிக்கு பிறகு ஜடேஜாவை ஆனந்த கண்ணீருடன் தூக்கிய தோனி
கோப்பையுடன் தோனி-ஜடேஜா(படம்: ஜடேஜா / டிவிட்டர்)
அதிவேக ஸ்டம்பிங் செய்து கில்லை வெளியேற்றிய தோனி
தோனி மற்றும் ஜடேஜா மகள்களுடன் சிஎஸ்கே வீரர்கள்
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மகேந்திர சிங் தோனி

 

ADVERTISEMENT
ADVERTISEMENT