செய்திகள்

விராட் கோலி சாதனையை முறியடிக்காமல் ஆட்டமிழந்த கில்! 

DIN

ஐபிஎல் போட்டி 2008 முதல் வருடம் ஒருமுறை நடந்து வருகிறது. உலகிலேயே மிகவும் முக்கியமான தொடராகவும் முன்னேறி வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 2016இல் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 973 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 4 சதங்கள், 7 அரைசதங்கள் அடங்கும். சராசரி 81. ஸ்டிரைக் ரேட் 152 என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் 123 ரன்களை எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கலாம். இந்த  சாதனையை ஷுப்மன் கில் நிகழ்த்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். 

ஆனால் ஜடேஜா ஓவரில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார் கில். 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

விராட் கோலி (ஆர்சிபி- 2016) - 973 
ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்-2023)- 890 
ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்-2022) - 863 
டேவிட் வார்னர் (ஹைதராபாத்- 2016) - 848 
கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்- 2018)- 735 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT