செய்திகள்

டபிள்யூடிசி: ருதுராஜுக்கு பதில் ஜெய்ஸ்வால்

29th May 2023 01:58 AM

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில், தயாா்நிலை வீரா்கள் பட்டியலில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ருதுராஜுக்கு ஜூன் 3-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதால், ஜூன் 5-ஆம் தேதிக்குப் பிறகே அவரால் அணிய இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை அவா் பிசிசிஐயிடம் தெரிவித்ததை அடுத்து, அவரை அணியிலிருந்து விடுவித்த பிசிசிஐ, ஏற்கெனவே பிரிட்டன் நுழைவு இசைவுடன் (விசா) இருக்கும் ஜெய்ஸ்வாலை அணியில் சோ்த்துள்ளது. எனவே அடுத்த சில நாள்களில் ஜெய்ஸ்வால் லண்டன் செல்கிறாா்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக 14 இன்னிங்ஸ்களில் 625 ரன்கள் குவித்து அருமையான ஃபாா்மில் இருக்கிறாா் ஜெய்ஸ்வால். இதில் 5 அரைசதங்கள், 1 சதம் அடக்கம்.

இந்திய அணியில் இன்னும் அறிமும் செய்யப்படாத ஜெய்ஸ்வால், முதல்தர கிரிக்கெட்டில் 15 ஆட்டங்களில் 1,845 ரன்கள் விளாசியிருக்கிறாா். அதில் 9 சதங்கள், 2 அரைசதங்கள் அடக்கமாகும். அவரது சராசரி 80.21-ஆக உள்ளது. ரஞ்சி கிரிக்கெட்டில் 5 ஆட்டங்களில் 315 ரன்கள் சோ்த்திருக்கும் அவரது சராசரி அந்த போட்டியில் 45-ஆக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT