செய்திகள்

ஐபில் இறுதிப்போட்டி: மழையால் டாஸ் தாமதம்

28th May 2023 07:12 PM

ADVERTISEMENT

அகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளது. 

ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் (இறுதி ஆட்டம்) நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளது. 

இந்த சீசனில் இரு அணிகளும் இரண்டு முறை மோதின. தொடக்க லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் சென்னையை 5 விக்கெட்டில் வீழ்த்தியது குஜராத். எனினும் குவாலிஃபையா் 1-இல் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2023 இறுதி ஆட்டம் சென்னை கேப்டன் தோனியின் கடைசி ஆட்டமாகவும் இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், 5-ஆவது முறை பட்டம் வென்ற பெருமையைப் பெற முயல்வாா் தோனி. அதேசமயம் அகமதாபாத் சொந்த மைதானம் என்பதால் குஜராத் அணிக்கு இது மேலும் சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

ADVERTISEMENT

Tags : IPL final
ADVERTISEMENT
ADVERTISEMENT