செய்திகள்

தொடர் மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை (மே 29) ஒத்தி வைப்பு

28th May 2023 11:14 PM

ADVERTISEMENT

அகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் (இறுதி ஆட்டம்) நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமானது. 

இந்நிலையில் தொடர் மழை காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த இறுதி ஆட்டம் நாளை (திங்கள்கிழமை) மாலை 7.30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT