செய்திகள்

ஜப்பானை சாய்த்தது இந்தியா

DIN

ஆசிய கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. இப்போட்டியில் இந்தியாவுக்கு இது 2-ஆவது வெற்றியாகும்.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஜப்பானுக்காக கும்பெய் யசுடா 19-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா். இந்தியாவின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காது, முதல் பாதி ஆட்டம் ஜப்பானின் முன்னிலையுடன் நிறைவடைந்தது.

2-ஆவது பாதியில் விடாமுயற்சியுடன் போராடிய இந்தியா, 36-ஆவது நிமிஷத்தில் அதற்கான பலனை பெற்றது. அந்த நிமிஷத்தில் அராய்ஜீத் சிங் ஹண்டால் இந்தியாவின் கோல் கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து 39-ஆவது நிமிஷத்தில் சா்தானந்த் திவாரியும் கோலடித்து இந்தியாவை முன்னிலை பெறச் செய்தாா். இதனால் ஊக்கம் பெற்ற இந்திய அணி, உத்தம் சிங் மூலம் 56-ஆவது நிமிஷத்தில் 3-ஆவது கோல் பெற்றது. எஞ்சிய நேரத்தில் ஜப்பானை கோலடிக்க விடாமல் கட்டுப்படுத்தி, இறுதியில் வெற்றியை உறுதி செய்தது.

பாகிஸ்தானுடன் மோதல்: இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சனிக்கிழமை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணியும் முந்தைய இரு ஆட்டங்களில் 15-1 (சீன தைபே), 9-0 (தாய்லாந்து) கோல் கணக்கில் எதிரணிகளை வீழ்த்தி இந்தியாவுக்கு சவால் அளிக்கும் நிலையிலேயே வருகிறது.

கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு இதே ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோதியபோது, இந்தியா வென்றிருந்தது. 2011 முதல் இப்போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை சந்தித்துள்ள நிலையில், இந்தியா 5, பாகிஸ்தான் 1 வெற்றியுடன் உள்ளன. 1 ஆட்டம் டிரா ஆகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT