செய்திகள்

வெளியேறப்போவது யார்? லக்னெள அணிக்கு 183 ரன்கள் இலக்கு

24th May 2023 09:28 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 

சென்னை எம்.ஏ. சிதம்பரம் திடலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இஷான் கிஷன் 15 ரன்களுக்கும், கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கிய கேமெரோன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு சூர்ய குமாரும் துணையாக நின்று ரன்களைக் குவித்தார். சூர்ய குமார் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து திலக் வர்மா களமிறங்கினார். அவர் 26 ரன்களுக்கு வெளியேற, கேமெரோன் 23 பந்துகளில் 41 ரன்களைக் குவித்தார். 

ADVERTISEMENT

மும்பை அணியில் அதற்கு அடுத்து வந்த வீரர்களான டிம் (13), ஜோர்டான் (4), சொற்ப ரன்களையே எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணி 182 ரன்களை சேர்த்தது.

லக்னெள அணியில் நவீன் வுல்-ஹக் 4 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்குர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

அதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னெள அணி விளையாடவுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT