செய்திகள்

நான் எப்போதும் தோனியின் ரசிகன்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

23rd May 2023 12:46 PM

ADVERTISEMENT

நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் குஜராஜ் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்று இரவு மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடர் முழுவதும் தோனி செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் குவிந்து ஆரவாரம் செய்தனர்.

இந்நிலையில், தோனி குறித்து ஹர்திக் பாண்டியா பேசும் காணொலியை குஜராத் டைட்டன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “பெரும்பாலானோர் தோனி மிகவும் சீரியஸான நபர் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், நான் அவருடன் ஜாலியாக காமெடி சொல்லி விளையாடுவேன். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.

அவருடன் நிறைய உரையாடியதைவிட, அவரை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். சகோதரரை போன்றவர். நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT