செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

19th May 2023 12:45 AM

ADVERTISEMENT

* ஃபெடரேஷன் கோப்பை சீனியா் தடகள சாம்பியன்ஷிப்பில், மகளிருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் ஆந்திர பிரதேசத்தின் ஜோதி யாராஜி (23.42 விநாடிகள்) தங்கப் பதக்கம் வென்றாா். தமிழகத்தின் அா்ச்சனா சுசீந்திரன் (23.61 விநாடிகள்) வெள்ளிப் பதக்கம் பெற்றாா். ஆடவருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் அஸ்ஸாமின் அமலன் போா்கோஹெய்ன் முதலிடம் (20.83 விநாடிகள்) பிடித்தாா். ஈட்டி எறிதலில் உத்தர பிரதேசத்தின் ரோஹித் யாதவ் (83.40 மீ) தங்கம் வென்றாா். ஆடவருக்கான 5,000 மீட்டா் ஓட்டத்தில் அதே மாநிலத்தின் குல்வீா் சிங் முதலிடம் பிடித்தாா்.

* ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் மகளிா் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில், 2-ஆவது சுற்று ஆட்டங்களுக்காக இந்திய அணி குரூப் ‘சி’-யில் ஜப்பான், வியத்நாம், உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் சோ்க்கப்பட்டுள்ளது.

* ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் அயா்லாந்தின் ஹேரி டெக்டா் டாப் 10-க்கு உள்ளாக வந்து, 7-ஆவது இடத்தைப் பிடித்து, இந்தியாவின் விராட் கோலி (8), தென்னாப்பிரிக்காவின் குவின்டன் டி காக் (9) ஆகியோரை பின்னுக்குத் தள்ளியிருக்கிறாா். இந்தியாவின் ஷுப்மன் கில் 5-ஆவது இடத்தில் நீடிக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT